புதன், நவம்பர் 4, 2026
Breaking
Breaking

யாழில் சற்று முன்னர் ஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்! 41 பேர் கைது

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியாவில் நிலவிய பதற்றம்! இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்தே 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

“உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இன்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறைகளாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். என்னால் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சிசிரிவி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்வில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்று விடுதியின் உரிமையாளரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்