ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
World

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

பகிர: Facebook WhatsApp X Telegram
தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார்.

வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.

இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்