புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

யாழில் சற்று முன்னர் ரயில் மீது பாய்ந்து ஒருவர் தற்கொலை!

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பு சென்ற ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்கும் இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் (35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு வந்த போது, நிர்வாகத்தினரால், பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், நேற்றும் (05) தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுடன், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்