செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் கோர விபத்தில் சிக்கிய பேருந்து! 18 பேரின் நிலை

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் கோர விபத்தில் சிக்கிய பேருந்து! 18 பேரின் நிலை

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்று இன்று அதிகாலை 3.15 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த பேருந்து, பாதையை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 55 பேரில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்