திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை! வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொறோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆராதனையில் கலந்து கொண்ட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இவ் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

அந்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278) உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விவரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும்.

இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது- என்றுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்