ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Srilanka

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிளிநொச்சியில் இராணுவ உயரதிகாரி உட்பட 21 பேர் கைது

யாழ்ப்பாணம் கொழும்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொது மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த காலப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை, குழப்பம் ஏற்படும் வகையில் செயற்பட்டமை என்பற்றை கருத்தில் கொண்டு இந்த நேரடி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்