திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Jaffna

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் (வீடியோ)

பகிர: Facebook WhatsApp X Telegram

யாழ் பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் இவர்களிடமிருந்து எழுபத்தெட்டாயிரம் ரூபா பணமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ் பொம்மைவெளி மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 38 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை மேலதிக விசாரணையின்பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்