இரவு தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

தேங்காய் எண்ணெய்யில் ஃபேட்டி ஆசிட் இருப்பதால் அது சருமத்துக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.

அதிலும் இரவு தூங்க செல்லும் முன்னர் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பல பலன்கள் கிடைக்கும்.

கடினமான, வறண்ட சருமம் என்றால் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் தடவிப் பாருங்கள். மாய்ஸசரைஸரில் இருக்கும் பலனைக் காட்டிலும் இதில் சிறப்பான பலனை உணர்வீர்கள்.

இதனால் எரிச்சல், கருந்திட்டுகளின்றி தெளிவான சருமத்தைப் பெறுவீர்கள்.

கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு என்பதால் எப்போதும் இளமையான சரும அழகைக் கொண்டிருப்பீர்கள்.

மேலும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், தோல் சுருக்கம் என எதுவுமே இருக்காது.

முகத்தில் உள்ள தழும்புகள், கீரல்கள் இருந்தாலும் தேங்காய் எண்ணெய் தடவி வர மறைந்துவிடும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like