புதன், நவம்பர் 4, 2026
Breaking
Breaking

யாழ் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; பெண்களே அவதானம்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; பெண்களே அவதானம்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். நகரின் மத்தியில் உள்ள சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை நேரம் பெண் ஒருவரே விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவர் இறங்கிச் சென்று 20 ரூபாவிற்கு பீடி கோரியுள்ளார்.

கடைக்காரர் பீடியை வழங்கிய சமயம் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண் கழுத்தில் இருந்த 4 பவுண் தங்கச் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு வீதியில் இயங்கு நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்ய முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்