சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்தி!

பகிர: Facebook WhatsApp X Telegram

மலையகத்தின் முன்னணி பாடசாலையான ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

இம்முறை இப்பாடசாலையிலிருந்து 191 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், இதில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 03 மாணவர்களும் 28 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 8ஏ சித்திகளை 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் இதுவரை அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த வருடமாக நடப்பு வருடம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு 14 மாணவர்கள் மாத்திரம் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும் இம்முறை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முறை உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்