திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
World

மாடர்னா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க FDA வெளியிட்ட முக்கிய தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
மாடர்னா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க FDA வெளியிட்ட முக்கிய தகவல்

மாடர்னா தடுப்பூசி போட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதலில் pfizer தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.

இதனையடுத்து சமீபத்தில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. அமெரிக்கா FDA ஒப்புதல் அளித்த இரண்டாவது கொரோனா தடுப்பூசி மாடர்னா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அழகுபடுத்த பேஷியல் ஃபில்லர்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி போட்டவுடன் வீக்கம் மற்றும் கட்டி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக FDA ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது

தடுப்பூசி போட்டவுடன் நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் புதிதாக வீக்கம் அல்லது கட்டிகளை ஏற்படுத்த தூண்டும். அவ்வாறு தான் தடுப்பூசி செயல்படும் என்று டாக்டர் ஷெர்லி சி கூறினார்.

மேலும், இந்த பக்க விளைவுகளுக்கு எளிதில் சிகிச்சையளிக்கப்படுவதாகக் டாக்டர் ஷெர்லி சி குறிப்பிட்டார்.

பக்க விளைவுகள் ஏற்படும் என்ற காரணத்திற்காக மக்கள் தடுப்பூசி பெறாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram