திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

டுவிட்டரில் இருந்து ஓட்டம் எடுத்த அர்ச்சனா

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்! தீயாய் பரவும் தகவல்

வெறுப்பைக் கொட்டும் நெட்டிசன்கள்: அர்ச்சனாவின் அதிரடி முடிவு

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது கலகலப்பான பேச்சால், தனக்கென தனி ரசிகர் வட்டம் வைத்திருப்பவர்கள் விஜே அர்ச்சனாவும் ஒருவர். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் செல்கிறார் என தெரிய வந்த போதே நிகழ்ச்சி கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, ஒரு சிலருக்கு மட்டும் ஆதரவாகச் செயல்பட்டு, சேப் கேம் ஆடினார் அர்ச்சனா. இதனால் அவரது பல செயல்கள் சமூகவலைதளங்களில் விமர்சனங்களுக்கு ஆளானது.

கடந்த வாரம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தார்.

ஆனாலும் தொடர்ந்து அர்ச்சனாவின் அன்பு ஸ்ட்ரேடஜியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒரு சிலரின் பேச்சு எல்லை மீறவும் செய்தது. போட்டியாளர்கள் தனித்தன்மையுடன் விளையாடுவதை அவர்தான் கெடுத்து விட்டார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்களின் இந்த தொடர் விமர்சனங்களால் கோபமான அர்ச்சனா, டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த அன்பினால் நான் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன். வெறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிக் கூறி, தனக்கு சோர்வாக உள்ளது. இதனால் தான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன்.

எனது வெறுப்பாளர்கள் இதனை கொண்டாட தயாராகுங்கள். ஆனால் நான் மீண்டும் இதைவிட வலுவாக முன்னேறுவேன். இனிமேலாவது நீங்கள் கேலியும் கிண்டலும் செய்வதற்கு அடுத்த நபரை கண்டுபிடியுங்கள்’ எனக்கூறி டிவிட்டருக்கு அவர் பை பை கூறியுள்ளார்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram