திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

21 வயதில் மாநகர முதல்வரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்

பகிர: Facebook WhatsApp X Telegram
21 வயதில் மாநகர முதல்வரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்

இந்தியா – கேரளா, திருவனந்தபுரம் மாநகர முதல்வராக ஆர்யா ராஜேந்திரன் எனும் 21 வயதான 2ம் வருட கல்லூரி மாணவி தெரிவாகியுள்ளார்.

கேரளாவின் 6 மாநகரங்களில் முதல்வர் தெரிவுக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

திருவனந்தபுரம் மாநகர தேர்தலில் பாரதியா ஜனதா கட்சியின் சிமி ஜோதிஸ் தோற்கடித்து மார்க்ஸிட் கட்சின் ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி ஆர்யா ராஜேந்திரன் 54 உறுப்பினர்களின் ஆதரவையும், சிமி ஜோதிஸ் 35 வாக்குகளையும் பெற்றனர்.

இதேவேளை கேரளா மாநிலத்தில் மாநகர முதல்வரான முதல் இளம் பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram