திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு; அவதானம் மக்களே

பகிர: Facebook WhatsApp X Telegram
இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு; அவதானம் மக்களே

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி செயற்படுபவர்களைக் கைது செய்ய இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட பொலிஸ் சுற்றிவளைப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரி வித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை விசேட பொலிஸ் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறியுள்ளார்.

அனுமதியின்றி இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுதல் மற்றும் கூட்டங்கள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஆராய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புதுவருடப் பிறப்பிற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் குறித்தகாலப்பகுதியில் பொதுமக்கள் தனிமைப் படுத்தல் சட்டங்களை மீறாமல் செயல்படுவதுடன் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புதுவருடத்தைக் கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram