யாழில் O/L மாணவிகளின் திருவிளையாடல்

வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் கூடிப்பேசி நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் உள்ள ஓர் பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கொண்ட காதல் தொடர்பினால் ஏற்பட்ட இடையூறுகளினால் பாடசாலையில் இரு சோடிகளும் ஒரே நாளில் தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளனர்.

இதன் பிரகாரம் நால்வலும் கூடிப்பேசி ஒருவகை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை புரிய முடிவு எட்டிய சமயம் ஒருவர் அதில் இருந்து விலகிச் சென்ற நிலையில் மூவரும் மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். நேற்றுக் காலை 11 மணியை தாண்டியவேளையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினையடுத்து சிறிது நேரத்தில் மயக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.

இவ்வாறு மயக்கமுற்ற பாடசாலை மாணவர்களை உடனடியாக ஆசிரியர்களின் முயற்சியினால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசா்ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like