செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நிலை தொடர்பில் வெளியான சிறப்பு செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
திருகோணமலையில் கடைக்கு சென்ற மீன்வியாபாரி திடீர் மரணம்; தீவிர விசாரணையில் பொலிஸார்

கடந்த மூன்று நாட்களில் ஏழு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களே அவையாகும்.

மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இருந்து பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இருப்பினும், நேற்று அதிக எண்ணிக்கையிலான 144 வழக்குகள் கம்பஹா மாவட்டத்திலும், நீர்கொழும்பில் 77 பேரும் பதிவாகியுள்ளனர்.

இருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 47 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய 31 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram