திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

காதலில் விழுந்த 17 வயது மாணவி… பின்பு அரங்கேறிய விபரீதம்

பகிர: Facebook WhatsApp X Telegram
காதலில் விழுந்த 17 வயது மாணவி… பின்பு அரங்கேறிய விபரீதம்

தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மிரட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் மாணவியின் உ.டலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்பு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இறப்பிற்கு காரணம்.

எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மாணவி செல்போனை கைப்பற்றி பொலிசார் ஆய்வு செய்த போது, மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் ஒன்றாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரைக் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram