திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு – தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்

பகிர: Facebook WhatsApp X Telegram
பலாலியில் காணி அபகரிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் மாவை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டமையானது தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்து அழிக்கப்பட்டது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்லைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னர் இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தனமான செயல் அரங்கேரியுள்ளது.

தமிழினத்தின் அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இது அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.

இந்த அராஜகத்தை தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் கண்டிக்கின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram