திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

15 வயதிலேயே சர்வே வேலை செய்தேன்! எப்படி சினிமாவுக்கு வந்தேன் தெரியுமா? பிக் பாஸ் நடிகையின் வாழ்வில் இவ்வளவு சோகமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
15 வயதிலேயே சர்வே வேலை செய்தேன்! எப்படி சினிமாவுக்கு வந்தேன் தெரியுமா? பிக் பாஸ் நடிகையின் வாழ்வில் இவ்வளவு சோகமா?

தனது 15 வயதிலேயே குடும்பத்துக்காக, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று நடிகை மோனல் கஜ்ஜார் கூறியமை ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மோனல் கஜ்ஜார் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக ரசிகர்களை சம்பாதித்தவர்.

மோனல் கஜ்ஜார் தெலுங்கு பிக் பாஸில் இருந்து இவர் வெளியேறிவிட்டாலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிகமான புகழும் ரசிகர்களும் கிடைத்துள்ளனர்.

இதற்கிடையே, தான் எப்படி நடிப்பை கற்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, நான் நடிப்பை எங்கும் கற்கவில்லை. நான் வாழ்வில் பலவித போராட்டங்களைச் சந்தித்து இருக்கிறேன். அதை நடிப்பாக மாற்றுகிறேன். ஒரு நல்ல நடிகராக மாற, அதை இதயத்தில் இருந்து உணர வேண்டும். பிறகு அதை கேரக்டர் மீது வைக்க வேண்டும்.

என் தந்தை இறந்ததும் நான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், 15 வயதிலேயே வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

சர்வே செய்யும் வேலையில் ஈடுபட்டேன். பிறகு வங்கியில் வேலை செய்தேன். மாடலிங் துறைக்கு சென்றேன். மிஸ் குஜராத் ஆனேன். பிறகு விளம்பரங்களில் நடித்தேன். பிறகு சினிமாவுக்கு வந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram