திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

கமல் ரஜினி பட பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்; இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கமல் ரஜினி பட பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்; இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

நடிகர் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர், பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.

இவர், கடந்த நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

98 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக அவதி பட்டு வந்து இன்று மாலை 6 மணியளவில் பயன்னூர் கூட்டுறவு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தன்னுடைய 76 வயதில் திரையுலகில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் தமிழில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகராக மாறினார்.

இவருடைய மரணம் பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram