திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

புது மாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து விருந்துவைத்த மாமியார்! எங்கு தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
புது மாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து விருந்துவைத்த மாமியார்! எங்கு தெரியுமா?

திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு.

அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும்.

அந்த வகையில் ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு மகளுடன் வந்த தனது புதுமாப்பிள்ளைக்கு, மாமியார் 125 வகை உணவுகளை சமைத்து டேபிளில் அடுக்கி உள்ளார்.

இந்நிலையில் அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram