திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

12 தேரர்களின் கடிதத்தால் அதிர்ந்த ஜனாதிபதி!

பகிர: Facebook WhatsApp X Telegram
12 தேரர்களின் கடிதத்தால் அதிர்ந்த ஜனாதிபதி!

இனவாத சிந்தனைக் கொண்ட சிலர் அரச பாதுகாப்புப் பொறிமுறையில் திரைமறைவே செயற்பட்டுவருவதாக முன்னணி பௌத்த தேரர்கள் 12 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சறுத்தல் ஏற்படுவதாகவும் தேரர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதியமைச்சர் அலிசப்ரியினால் ஜனாதிபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் திணைக்களத்திற்கு சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக் கொள்ளும் யோசனை விவகாரத்தில் தமிழ் மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவது விடயத்தில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தீர்மானம் என்பது அரசியலமைப்பு முரண் மற்றும் துரோகச் செயற்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ள தேரர்கள், அதனை அனுமதிக்க வேண்டாம் என்கிற கோரிக்கையையும் தேரர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் எல்லே குணவங்ச, பெங்கமுவே நாலக்க, முருந்தெட்டுவே ஆனந்த, ஓமாரே கஸ்ஸப்ப, அதபத்துகந்தே ஆனந்த உள்ளிட்ட பிரபல தேரர்களே கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram