திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

நாளை மறுநாள் திருமணம்; யாழில் சோக சம்பவம்

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்கையின் கணவரை கத்தியால் குத்திய அண்ணன்: பகீர் கிளப்பிய சம்பவம்

யாழில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6 வயது மகனும் தமது சொந்த இடமான பருத்தித்துறைக்கு அண்மையில் சென்றிருந்தனர்.

இரண்டு தினங்களின் முன்னர் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் யுவதிக்கு நாளை மறுநாள் (23) திருமண திகதி நிச்சயிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த திடீர் சம்பவத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை அந்த தினத்தில் நடத்த முடியாத நிலையேற்பட்டு, திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram