திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையர்களிற்கு பேஸ்புக் வழங்கிய புதிய அம்சம்

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையர்களிற்கு பேஸ்புக் வழங்கிய புதிய அம்சம்

பேஸ்புக் இன்று இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை பேஸ்புக்கில் இரத்த தான அம்சத்தை பெற்ற 29 வது நாடாக பதிவானது.

நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த வங்கிகள் பேஸ்புக் சிறப்பு அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

18-55 வயதுக்குட்பட்ட பேஸ்புக் பயனர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிகள் அல்லது மருத்துவமனைகளில் பதிவுசெய்து இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறலாம்.

இரத்த தானம் செய்ய அதிகமானவர்களை ஊக்குவிப்பதற்கும், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், சிறப்பு பேஸ்புக் இரத்த தான அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்தம் தேவைப்படுவோர்க்கு மட்டுமின்றி இரத்தம் வழங்குவோரை சுலபமாக தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram