திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

பறிபோனது யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்;சமூக ஆர்வலர்கள் கவலை

பகிர: Facebook WhatsApp X Telegram
பறிபோனது யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்;சமூக ஆர்வலர்கள் கவலை

யாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சமுக ஆர்வலர்கள் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாகாண கல்வியமைச்சின் ஆழுகைக்குட்பட்ட குறித்த பாடசாலை சைவ பாடசாலையாக மிக நீண்டகாலம் இயங்கிவந்தது.

இந் நிலையில், பாடசாலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் மாகாண கல்வியமைச்சினால் பாடசாலை அண்மையில் மூடப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து ஜனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் செயலணியின் பயன்பாட்டுக்காக குறித்த பாடசாலை கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வியமைச்சினால் ஒரு வருடத்திற்கு குறித்த பாடசாலை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் குறித்த பாடசாலையை மூடும் தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில் பாடசாலை மூடப்பட்டு வேறு தேவைக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram