திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

முள்ளிவாய்க்கால் தூபி கட்ட விட மாட்டோம்; யாழில் ஊர்வலம் சென்ற சிலர்! அமைச்சர் ஒருவரும் பங்கேற்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட விட மாட்டோம்; யாழில் ஊர்வலம் சென்ற சிலர்! அமைச்சர் ஒருவரும் பங்கேற்பு

முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், ஒரே நாடு ஒரே தேசம் என கூறி சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு சிறிய குழு ஒன்று யாழில் இன்று ஊர்வலமாக சென்றுள்ளது.

குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து நகரம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில் குறித்த ஊர்வலம் பாதுகாப்பு தரப்பினரின் பின்னணியில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஆவா குழு ரௌடியென தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தலைமையில் இந்த போராட்டம் நடந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கலந்து கொண்டார்.

 

மேலும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலர் தமிழ் பேசவும் வெகுவாக சிரமப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram