திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை; நடிகர் சூர்யாவிற்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை; நடிகர் சூர்யாவிற்கு கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர் இதைப்பற்றி ட்விட்டர் வாயிலாக கூறியதாவது, ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்.

வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram