திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் இடம்பெற்ற பேரணி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் உணர்ச்சிபூர்வ பதிவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
கிழக்கிலேயே பேரணிக்கு எதிர்ப்பு இல்லை; கிளிநொச்சியிலோ, யாழிலிலோ இடம்பெற அனுமதிக்காதீர்கள்!

தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகி, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த பேரணியில் அனைத்து இனமக்களும் பங்கு பெற்று ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்,

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு இதோ…

தமிழர் தேசியத்தில் அன்றும்சரி இன்றும்சரி சாதியோ மதமோ எதுவுமே தடையாய் அமைந்ததில்லை.

முறுக்குமளவுக்கு என்னிடம் அவ்வளவு பெரிய மீசை இல்லை, இருந்தாலும் முறுக்கேறிச் சொல்கிறேன்,

சுட்டாலும் மணக்காத கட்டாப்பாரை மீன்களல்ல,

சுட்டுப்போட்டாலும் மாறவே மாறாத

சூடு சுரணையுள்ள இனமடா இது!

போராட்டத்தைக்கண்டு புகைத்துப்போயுள்ளவனும் நம்மினத்தவன்தான்…

பாவம்… என்ன செய்வது?

இதைக்கண்டு புகைத்தால்தானே-அவன்

அடுப்படி புகையும்!

அந்தப் புகையில் அவன்

பிள்ளைகளின் பசிப்புகையும் இருக்கலாம்…

சலுகையும் சன்மானமும் அவன்தன்

கண்களை மறைத்திருக்கலாம்…

காலம் அவனை நல்வழிப்படுத்தும்!

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram