திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! யார் கண்ணிலும் படாத இந்த இளைஞனைத் தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram

எந்தவிதமான பின்புலமுமில்லாது (பணம்,பதவி,மாளிகை,சொத்து )பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P யின் இயங்கு தளத்திற்கு துணை நின்ற சகோதரன் வாழைச்சேனை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணசேகரன் கூட பெரு மதிப்பிற்குரியவனே…

காரணம் சாணாக்கியனுக்கு கட்சி பேதம் பார்க்காது பாதுகாப்புக் கொடுத்தவன் அவன், இதனை எத்தனை பேர் அவதானித்து இருப்பார்களோ தெரியாது, சில வேளை இவ் இளைஞன் யார் என்று கூட சிலர் கேட்கக் கூடும் அது தான் உண்மை.

இன்று சாணக்கியனை பேற்றும் சமூகம் இந்த இளைஞனை யாரும் கண்டுகொள்ள மாட்டீர்கள், ஏனென்றால் அவனிடம் பண பலம் இல்லை அது மட்டுமல்லாது இவன் ஒரு ஏழை!

பரபரப்பு இல்லாமல் மக்களிற்கான உன் உணர்வு அது ஈடு இணையற்றது, வெற்றிக்கு வழிசமைத்தவர்களில் நீயும் ஒருவன் ஆனால் உன்னை யாருக்கும் தெரியவில்லை அது தான் வடக்கு – கிழக்கு மக்கள் பலரின் ஏக்கம்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் அனைத்து போராட்டத்திலும் முன்னணியிலும், பலத்த கோசம் எழுப்புவதிலும் இவர் முதன்மையானவன், ஆனால் யாரும் பார்ப்பதில்லை காரணம் உங்களிற்குப் புரியும்.

வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் சேயேன் மற்றும் குணசேகரன் எதிர்ப்பினால் பிள்ளையான் தலை தெறிக்க ஓடியது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர்களை யாரும் பார்ப்பதில்லை காரணம் உங்களிற்குப் புரியும்.

பணம்,பதவி,மாளிகை,சொத்து உள்ளவன் என்ன குற்றம் செய்தாலும் பின்னர் அவன் சிறிதாக எதைச் செய்தாலும் தமிழ் சமூகம் பெரிதாக அங்கிகரிக்கும், பெரிதாக செய்யும் ஏழையை சிறிதாகவும் தமிழ் சமூகம் மதிப்பதில்லை.

எது எப்படியோ குணசேகரன் வருங்காலம் உனை வாழ்த்தும் அது மட்டும் தான் கூற முடியும் என முகநுால் பதிவில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் தம்பி என………………

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram