அண்ணன் என்று அழைத்த தர்ஷனுடன் ஜோடியா? விமர்சித்த ரசிகர்… கவின் பிரச்சினை குறித்து தக்க பதிலடி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் லொஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது இந்தியாவில் பெரும் ரசிகர்கள் மனதினை கொள்ளை கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். இந்த பிக்பாஸ் சீசன் 3ல் காதலுக்கு மட்டும் பஞ்சமில்லை என்றே கூறலாம்.

லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்பு பயங்கர விறுவிறுப்பாக சென்றது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மேலும்,ரசிகர்கள் “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

தற்போதும் இருவரும் காதலித்து வருவதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், சமீபத்தில் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை என்று இதுகுறித்து பேசாமல் தக்க பதிலடி கொடுத்தார் லொஸ்லியா.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கவின் குறித்து பேசியுள்ள லாஸ்லியா, எனக்கும் கவினுக்கும் இருப்பது பர்சனல். அதைவிட்டுவிட்டு என் படத்தை பற்றி கேளுங்கள்.

மேலும், எனக்கும், கவினுக்கும் இருப்பது என்ன என்பதை பற்றி சொல்ல எனக்கு அவசியமும் இல்லை.

மேலும், தர்ஷனை அண்ணன் என்று சொல்லிவிட்டு இப்போது அவருடன் ஜோடியாக நடிக்கிறீர்கள் என்று ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு லொஸ்லியா, அது பெர்சனல் லைப், இது சினிமா. இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டு இருவரும் வெளியில் வரப்போகிறோம் அவ்ளோ தான் என்று கூறியுள்ளார்.