ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
Srilanka

ஐபிஎல் தொடரில் ஈழத்து இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
ஐபிஎல் தொடரில் ஈழத்து இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

2021ம் ஆண்டுக்கான ஐ.பிஎல் தொடர் ஏப்ரல் முதல் மே மாதம் வரை இடம்பெறவுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை எடுப்பதற்கு ஏலம் இடம்பெற இருக்கிறது.

இதேவேளை வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.

19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram