திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கள்ளக் காணி பிடிப்பதில் தகராறு; வாள்வெட்டில் 3 பேர் படுகாயம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கள்ளக் காணி பிடிப்பதில் தகராறு; வாள்வெட்டில் 3 பேர் படுகாயம்

மாந்தை கிழக்கில் கள்ளக்காணி தகராறு முற்றியதில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு – ஒட்டறுத்தகுளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் காட்டை அழித்து இருவர் காணி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இருவருக்கும் இடையில் உருவான தர்க்கம் நேற்று மாலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் இரு குழுக்களாக மோதிக் கொண்டதில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காணி அபகரிக்கும் நபர்களுக்கு அரச திணைக்களங்கள் உடந்தையாக காணப்படுவதாகவும்

இவ்வாறு அறுபது ஏக்கருக்கு மேல் காடு தள்ளப்படும் வரை எவரும் கண்டுகொள்ளாத தன்மை காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலுல் இதன் காரணமாகவே குறித்த அராஜக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram