திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

பேய் ஓட்டுவதாக கூறி நடத்தப்பட்ட சடங்கு… இலங்கையில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பரிதாபம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பேய் ஓட்டுவதாக கூறி நடத்தப்பட்ட சடங்கு… இலங்கையில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பரிதாபம்

இலங்கையில் பேய் ஓட்டும் சடங்கு ஒன்றின்போது, சிறுமி ஒருத்தி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்புவிலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலுள்ள மீகஹவத்த, தெல்கொட கந்துபொட என்ற பிரதேசத்தில் இடத்தில் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தன மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கருதிய ஒரு பெண், அவளை பேய் விரட்டும் பெண் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பெண், அந்த ஒன்பது வயது சிறுமியின் உடலில் எண்ணெயை ஊற்றி பிரம்பால் தொடர்ந்து அடித்தாராம்.

அடி தாங்காமல் சிறுமி மயங்கி விழவே, உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆனால், அந்த சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டாள். இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிசார் நேற்று அந்த பேய் ஓட்டும் பெண்ணையும், உயிரிழந்த சிறுமியின் தாயையும் கைது செய்தனர்.

அந்த பெண் சமீப காலமாக பேய் ஓட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளதையடுத்து, வேறு யாராவது அவரால் துன்புறுத்தப்பட்டார்களா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram