செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

இந்துகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பிரதமர் மகிந்த

பகிர: Facebook WhatsApp X Telegram
இந்துகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பிரதமர் மகிந்த

மகா சிவராத்திரி விரதம் இந்து ஆலயங்களில் சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும், ஊக்கப்படுத்தலையும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பணிப்புரயை அவர் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.

அதனபடி சிவராத்திரி விரதத்தை இந்து ஆலயங்களில் சிறப்புற நிகழ்த்த ஊக்கப்படுத்துமாறும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை மகா சிவராத்திரி விரதத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளமை குறிப்பித்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram