திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

செல்பியால் ஏற்பட்ட நிலை -ரஞ்சனுக்கு விதிக்கப்பட்டது புதிய தடை

பகிர: Facebook WhatsApp X Telegram
செல்பியால் ஏற்பட்ட நிலை -ரஞ்சனுக்கு விதிக்கப்பட்டது புதிய தடை

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 78வது சரத்துக்கு அமையவே, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறைச்சாலையில் வழங்கப்படும் மூன்று நிமிட தொலைபேசி வசதியை இரண்டு வார காலத்திற்கு பயன்படுத்த ரஞ்சனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், அதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிக்கு எதிராக தொடர்ந்தும் முறையான விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram