திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கொழும்பில் அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம் – 40இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை

பகிர: Facebook WhatsApp X Telegram
கொழும்பில் அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம் – 40இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை

மாளிகாவத்தை, கஜிமாவத்தை வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 – 50 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்தில் 250க்கும் அதிகமான வீடுகள் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

6 தீயணைக்கும் வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த தீவிபத்தினால் உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் இதுவரையில பதிவாகவில்லை என தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram