ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking
India

பேஸ்புக் வீடியோவை பார்த்து.. சிறுவன் தனக்குதானே செய்த கொடூரம்.. கதறிய குடும்பம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பேஸ்புக் வீடியோவை பார்த்து.. சிறுவன் தனக்குதானே செய்த கொடூரம்.. கதறிய குடும்பம்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த சிவநாரயணன்.

இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

அதில், ஹேர் சலூன் வீடியோவில் சுருட்டை தலை முடி உள்ளவரை எரிசாரயம் மற்றும் நெருப்பை பயன்படுத்தி முடியை நேராக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதைக்கண்ட, சிவநாராயணன் தானும் அதுபோல் செய்து பார்க்க எண்ணி, தனது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நெருப்புக்குச்சி கொண்டு முடியினை நேராக்க முயன்றுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக, தலை முழுக்க தீ பரவி அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அவரது அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தார் ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநாராயணன் மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram