திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

பெட்ரோல் விலை உயர்வை குத்திக்காட்டி சைக்கிளில் வந்த நடிகர் விஜய்?.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! உண்மை என்ன?

பகிர: Facebook WhatsApp X Telegram
பெட்ரோல் விலை உயர்வை குத்திக்காட்டி சைக்கிளில் வந்த நடிகர் விஜய்?.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! உண்மை என்ன?

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

மேலும், அவர் அணிந்திருந்த சட்டை முதல், மாஸ்க், சைக்கிள் என அனைத்திலும், அனைத்து கட்சியின் பெயர்களையும் கூறி நெட்டிசன்கள் மீம்ஸ் ட்ரோல் காட்சிகளாக வெளியிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, தற்போது ட்விட்டர் பக்கத்திலும் விஜய்க்கு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வர, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குத்தி காட்டும் விதமாக விஜய் சைக்கிளில் வந்துள்ளதாக பேசி வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

மேலும், #PetrolDieselPriceHike என்ற ஹேஷ்டேகையும் விஜய் புகைப்படத்தோடு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இதற்கு முன் ஏற்கனவே ஆடியோ மேடைகளில் விஜய் மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் கட்சியினரை விமர்ச்சித்தையும் வைத்து நெட்டிசன்கள் விஜய் வாக்களித்த கட்சியின் பெயரை குறிப்பிட்டு வருகின்றனர்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram