சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Srilanka

பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளை சேர்ந்த 20பேர் அதிரடியாக கைது!

பகிர: Facebook WhatsApp X Telegram
பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளை சேர்ந்த 20பேர் அதிரடியாக கைது!

கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்றுமுன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு முச்சக்கர வண்டிகளை இடைநிறுத்திய கடற்படையினர் அவர்களிடம் மேற்கொண்ட சோதனைகளின்போதே அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் 16 வயது சிறுவன் உட்பட 15 ஆண்களும், 13 வயது சிறுமி உட்பட ஐந்து பெண்களும் அடங்குவர்.

அத்துடன் அவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வத்தளை, புத்தளம் மற்றும் வாளைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சட்டவிரோத வெளியேற்ற முயற்சியை உருவாக்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கைதான நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளும் சிலாம் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram