திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு தள்ளிய பெற்றோர்- சிறிதுநேரத்திலேயே இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பகிர: Facebook WhatsApp X Telegram
கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு தள்ளிய பெற்றோர்- சிறிதுநேரத்திலேயே இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்துரை.

இவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, திருமணத்திற்கு முன்னதாக ரஞ்சனி ஏற்கனவே ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஞ்சனியின் காதல் விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் ரஞ்சனியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும், ரஞ்சனி தான் போலீஸ் வேலைக்கு தேர்வாகி உள்ளதாகவும், கர்ப்பம் அடைந்தால் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என கூறி ஒரு மாதமாக ரஞ்சனி முதலிரவுக்கு மறுத்து வந்துள்ளார்.

இதனிடையே, ரஞ்சனியின் பெற்றோர் கடந்த 16-ஆம் தேதி இரவு வலுக்கட்டாயமாக அவரை முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனி இரவு நேரம் என்றுகூட பார்க்காமல் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் வரை அவரை குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.

இதன்பின்னர், இரவு அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக ரஞ்சனியின் குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது. பின் அங்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது ரஞ்சனி என தெரியவந்தது.

முதலிரவுக்கு கட்டாயப்படுத்தியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram