திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

உயிரிழந்த 16 வயது மகள்… 35 கிலோ மீற்றர் தோளில் தூக்கிவந்த தந்தை! வைரல் காணொளி

பகிர: Facebook WhatsApp X Telegram
உயிரிழந்த 16 வயது மகள்… 35 கிலோ மீற்றர் தோளில் தூக்கிவந்த தந்தை! வைரல் காணொளி

மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ரவுலி மாவட்டத்தை சேர்ந்த திரபதி சிங் என்பவரின்16 வயது மகள் கடந்த 5ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் திரபதி சிங் மகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

ஆனால் மிகவும் ஏழையான திரபதி சிங்கால், மகளின் சடலத்தை கொண்டு செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டிலில் வைத்து தூக்கி செல்ல முடிவு செய்தார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த கயிற்று கட்டிலில் மகளின் சடலத்தை வைத்து 35 கி.மீ. தூரம் தூக்கிச் சென்றுள்ளார். சுமார் 7 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram