திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

கங்கையில் மிதக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்! கொரோனாவால் இறந்தவர்களா? திகில் கிளப்பும் வீடியோ காட்சிகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
கங்கையில் மிதக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்! கொரோனாவால் இறந்தவர்களா? திகில் கிளப்பும் வீடியோ காட்சிகள்

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பது போன்ற வீடியோக்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் கொரோனா வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இதன் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பல வல்லுநர்கள் உண்மையான தினசரி எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஏனெனில், இந்த தொற்றுநோய் நகரங்களில் இருந்து அதிகமான கிராமப்புறங்களுக்கு பரவியுள்ளது, அங்கு மருத்துவமனைகள் குறைவாகவும் தொலைவில் உள்ளதால், இங்கு ஏற்படும் உயிரிழப்புகளை கணக்கிடமுடியவில்லை.

இதனால் இது துல்லியமான கணக்கெடுப்பாக இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் காணப்படுகின்றன.

குறிப்பாக பீகாரின் Buxar மாவட்டத்தின் கங்கை ஆற்றங்கரையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து உள்ளூர் அதிகாரி அசோக் குமார் என்பவர் கூறுகையில், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் எல்லைக்கு அருகே சுமார் 40 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

YouTube video

தகன இடங்கள் அதிகமாக இருந்ததாலோ அல்லது உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு விறகு வாங்க முடியாததாலோ உடல்கள் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். சில உடல்கள் வீங்கியிருந்தன மற்றும் சில உடல்கள் ஓரளவு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

அவை பல நாட்கள் ஆற்றில் கிடப்பது போல் தெரிவதாக கூறினார். அனைத்து உடல்களையும் அப்புறப்படுத்தவோ, அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா எளிதில் ஒருவரிடம் இருந்து பரவும் என்பதால், இப்படி ஆற்றங்கரையில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் மிதப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த சடலங்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவை இல்லை என உத்தரப் பிரதேச மாநிலமும், பீகார் மாநிலமும் கூறுவதுதான்.

இதேபோல ஹிமிர்புர் என்ற பகுதியில் ஓடக்கூடிய யமுனை நதியில் பாதி எரிந்த நிலையில் சில உடல்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக கூறும் உள்ளூர் மக்கள், இதனால் தங்கள் கிராம மக்கள் பெரும் பீதியடைந்து உள்ளதாக கூறுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram