திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாட்டையே உலுக்கிய அந்த வீடியோ: அதிரடியாக செயல்பட்டு கண்டுபிடித்த பொலிஸ்

பகிர: Facebook WhatsApp X Telegram
இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாட்டையே உலுக்கிய அந்த வீடியோ: அதிரடியாக செயல்பட்டு கண்டுபிடித்த பொலிஸ்

இந்தியாவில் இளம் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

அதில் பெண் ஒருவரின் உறுப்பில், பாட்டிலை நுழைத்து கும்பல் ஒன்று பலாத்காரம் செய்வது போன்று இருந்தது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் கடும் அதிர்ச்சியடைந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை வைத்து, பொலிசார், இவர்கள் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று இருப்பதாக கூறி, அசாம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பெங்களூரு பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைதான நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளோம். குற்றவாளிகள் அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், பணப் பிரசசினை தொடர்பாக, குறித்த பெண்ணை வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் கடத்தி வந்து, இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.

இப்போது, அந்த பெண் தற்போது வேறு மாநிலத்தில் உள்ளார். அவரை அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அதில் 2 பேர் தப்பியோட முயன்றதால், பொலிசார் உடனடியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அப்போது குற்றவாளிகள் கால்களில் காயம் ஏற்படவே, உடனடியாக அவர்கள் அங்கே சுருண்டு விழுந்தனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram