வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking
World

கடந்த 24 மணிநேரத்தில் 34, 951 பேருக்கு கொரோனா பாதிப்பு- கதிகலங்கிய நாடு!

பகிர: Facebook WhatsApp X Telegram
கடந்த 24 மணிநேரத்தில் 34, 951 பேருக்கு கொரோனா பாதிப்பு- கதிகலங்கிய நாடு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், ஒரு சில நாடுகளில் தடுப்பூசியின் முயற்ச்சியால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதாக, தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். ஆனாலும், மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் பெரிய அச்சம் உள்ளது.

இதையடுத்து, உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது. மேலும், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக 34,951 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,58,197 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 357 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 32 லட்சத்து 91 ஆயிரத்து 979 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 3,76,739 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram