ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
India

இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யபட்ட நபர்: உயிருடன் வந்ததால் பயந்து ஓடிய மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யபட்ட நபர்: உயிருடன் வந்ததால் பயந்து ஓடிய மக்கள்

கர்நாடக மாநிலம் துமகூரு நகர் அடுத்து உள்ளது சிக்கமாளூரு கிராமம் .இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா. 60 வயதான இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.

பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் தனது இரண்டாவது மகள் நேத்ராவதி வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்தபடி மருத்துவமனையில் சிறு வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

மீண்டும் 3 மாதத்திற்கு முன்னர் அவர் காணாமல் போய்விட்டார்.இந்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இது நாகராஜப்பாவின் உடல் அடையாளங்களுடன் ஒத்து போனதால் அவரது தந்தை தான் என்று நேத்ரா அந்த உடலை பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் சொந்த ஊருக்குச் சென்று அடக்கம் செய்து உள்ளனர் . காரியம் நடத்தி முடித்து வீட்டில் அவரது போட்டோ பிரேம் போட்டு மாலையுடன் மாட்டப்பட்டுவிட்டது. இது நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

இந்த நிலையில் நேற்று காலையில் சிக்கமாளூருக்கு நாகராஜப்பா சென்றிருக்கிறார். பேருந்தில் இருந்து இறங்கிய அவரை கிராமத்தினர் ஒரு வித பயத்துடன் பார்த்திருக்கிறார்கள். அவரிடம் பேசுவதற்கு பயந்து அனைவரும் ஓரத்திலேயே நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சிலர் ஓடி ஒளிந்தனர்.

இதை வித்தியாசமாக உணர்ந்த நாகராஜப்பா தனது வீட்டிற்கு சென்றுள்ளார் .அவரை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதன்பிறகு தான், தான் இறந்ததாகச் சொல்லி வேறொருவரை அடக்கம் செய்த விபரம் தெரியவந்திருக்கிறது .

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜப்பா மகளிடம் சொல்லாமல் சென்றிருக்கிறார். பல இடங்களில் சுற்றித் திரிந்த அவர் , கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்துள்ளார் . தற்போது குடும்பத்தினரின் ஞாபகம் வர வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஆனால் தற்போது நாகராஜப்பா என்று நினைத்து அடக்கம் செய்தது யாருடையது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram