ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
India

லொட்டரியில் அடித்த ஜாக்பாட்! வெறும் 270 ரூபாயால் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்

பகிர: Facebook WhatsApp X Telegram
லொட்டரியில் அடித்த ஜாக்பாட்! வெறும் 270 ரூபாயால் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்

இந்தியாவில் 270 ரூபாய்க்கு லொட்டரி வாங்கிய நபருக்கு, ஒரு கோடி ரூபாய் லொட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கொல்கத்தா மாநிலத்தின் மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு East ​​Bardhaman மாவட்டத்தைச் சேர்ந்தவர் Sheikh Heera. ஆம்புலன்ஸ் டிரைவரான இவர், சமீபத்தில் 270 ரூபாய்க்கு லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது அந்த லொட்டரி டிக்கெட் மூலம், இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போன அவர் உடனடியாக தன்னுடைய லொட்டரி டிக்கெட்டை பாதுகாக்க வேண்டும், தொலைத்துவிடக் கூடாது என்பதற்காக, காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். அதன் பின் அவர் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.’

Sheikh Heera-வின் தாயார் கடுமையான நோயால் அவதிப்பட்டு வருகிறார், அதற்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் தேவை என்பதால், இதில் கிடைக்கும் பணத்தை வைத்து, அவர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளார்.

மேலும், அவர் நான் எப்போது ஜாக்பாட் வெல்வதைப் பற்றி கனவு கண்டேன். டிக்கெட்டுகளை வாங்குவேன். இறுதியாக அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

தாய்க்கு தேவையான சிகிச்சை அளித்த பின்பு, ஒரு நல்ல வீட்டை கட்ட முடிவு செய்திருப்பதாகவும், இதைத் தவிர தற்போது தனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த லொட்டரி டிக்கெட்டை விற்ற கடைக்காரர் Sheikh Hanif கூறுகையில், பல ஆண்டுகளாக நான் லொட்டரி சீட்டு வியபாரம் செய்து வருகிறேன். எனது கடையில் நிறைய பேர் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர்.

ஆனால் இதுவரை எவரும் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றது கிடையாது. இப்போது எனது கடையில் வாங்கிய ஒரு நபருக்கு ஒரு கோடி ரூபாய் அடித்துள்ளது, மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram