ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
India

கனடாவில் குடியேற வேண்டும் என்ற ஆசையில் மறுமணம் செய்ய நினைத்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்..

பகிர: Facebook WhatsApp X Telegram
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு

கனடாவில் சென்று குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். பணக்கார இளைஞரான இவர் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரின் மகன் ஆவார்.

அதே ஊரை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கு வெளிநாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து அவரிடம் நட்பான ஹர்மன், தனது இரண்டு சகோதரிகளும் கனடாவில் வசிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் கனடாவில் குடியேறி விடலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் கணவரை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு தெரிவித்தார், இதை நம்பிய அப்பெண்ணும் ஹர்மனுடன் மனைவி போல வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் ஹர்மனிடம் கேட்ட போது அவர் மறுத்துள்ளார்.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார், இது குறித்து கணவரிடம் சென்று அப்பெண் கூறியுள்ளார், மேலும் கனடாவுக்கு சென்று வாழ வேண்டும் என ஆசைபப்ட்ட அப்பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் இது குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக உள்ள ஹர்மனை தேடி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram