ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
India

கணவரின் அஜாகிரதை: உயிரிழந்த பச்சிளங் குழந்தை! ஆபத்தான நிலையில் மனைவி

பகிர: Facebook WhatsApp X Telegram
பிணவறையில் போடப்பட்டு தப்பி வந்த கிளிநொச்சி பெண் உயிரிழந்த சோகம்!

மனைவியின் பிரசவத்தினை யூடியூப் பார்த்து கணவர் முயற்சி செய்ததால் குழந்தை பலியான சோகம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கோமதி.

மரச்செக்கு வியாபாரம் செய்யும் இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 13ம் திகதி பிரசவ தேதி மருத்துவர்கள் கொடுத்துள்ள நிலையில், அதற்கான அறிகுறி எதுவும் கோமதிக்கு வராமல் இருந்துள்ளது.

மருத்துவர்கள் கூறிய திகதியிலிருந்து 5 நாட்கள் கழித்து பிரசவ வலி ஏற்படவே, லோகநாதன் தனது அக்கா கீதாவுடன் சேர்ந்து யூடியூப்பை அவதானித்து பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் கோமதிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோமதி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் லோகநாதன் மற்றும் கீதாவிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram