ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
India

கணவர் செய்த சிறிய தவறு: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி

பகிர: Facebook WhatsApp X Telegram
கணவர் செய்த சிறிய தவறு: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாக செய்த காரியம் இறுதியில் பரிதாபமாக உயிர் பிரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே இருக்கும் ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை திருமணம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து துபாய் சென்ற அவினாஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்த நிலையில், துபாய் செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால் ஸ்ரீலஷ்மிக் அவினாஸ் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், அவினாஷ் கொரோனா காலம் என்பதால் 3 மாதம் விடுமுறை என்று பொய் கூறிவிட்டு, இருந்துள்ளார்.

இது ஸ்ரீலஷ்மிக்கு உண்மை தெரியவரவே, கடும் கோபத்திற்கு சென்றவர், மீண்டும் துபாய் போக வேண்டும் என்று தனது வாயில் விஷத்தை ஊற்றிக்கொண்டு, தலையில் அடித்து சத்தியம் வாங்கியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக விஷம் வயிற்றுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீலஷ்மி அங்கே சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த நிலையில் அவினாஷிடம் தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram