சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பகிர: Facebook WhatsApp X Telegram
தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதார வைத்திய அதிகாரியின் பல அலுவலகங்களில் தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாணந்துறை, வாதுவ, ஹொரண உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அலுவலகங்களில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
மேலும் தொற்றினால் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சமூகத்திற்கு அறிவிக்கும் வகையில், களுத்துறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் விசேட கூட்டமொன்றை அழைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், தோலில் உணர முடியாத புள்ளிகள் தென்பட்டால், விரைவில் அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறும், இதன் மூலம் தொழுநோயை உடனடியாக குணப்படுத்த முடியும் என்றும் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram